இயக்குனராகும் திட்டம் இல்லை - தபு

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துவிட்ட தபு அளித்த பேட்டியில், தனக்கு இயக்குநராகும் திட்டம் ஏதும் இல்லை என்று கூறினார். #Tabu
இயக்குனராகும் திட்டம் இல்லை - தபு
Published on

தமிழில் சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தபு. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். 47 வயதாகும் தபு திருமணம் செய்துகொள்ளவில்லை.

வயதானாலும் இளமையை பராமரித்து வருவதோடு, சமூகவலைதள பக்கங்களில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருகிறார். நடிகைகள் சிலர் அனுபவத்தின் அடிப்படையில் இயக்குநர்களாகி உள்ளனர். அதுபோல் இயக்குநராகும் ஆசை இருக்கிறதா என்று கேட்டதற்கு தபு கூறியதாவது:-

சினிமாவில் நடிப்பதால் மட்டுமே இயக்குநராகிவிட முடியும் என்று நான் எண்ணவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு முழுபடத்தை இயக்குவது, தயாரிப்பது என்பது என்னால் முடியாத காரியம். வேண்டுமானால் பின்னாளில் குறும்படம் இயக்கலாம். எனது ஆர்வம் என்னவென்றால் கதை எழுதுபவருக்கு துணையாக இருந்து உதவவேண்டும் என்பதுதான். இணையதளத்தில் நான் நிறைய தளங்களில் இணைந்திருக்காவிட்டாலும் இன்ஸ்டாகிராம் பகுதியில் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் மூலம் நமது நினைவுகளை பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதுபற்றி யாரிடமும் ஆழ்ந்த விவாதம் செய்வதில்லை’.

இவ்வாறு தபு கூறினார். #Tabu

X

Maalai Malar
www.maalaimalar.com