ரிலீசுக்கு முன்பே அதிக தொகைக்கு வியாபாரமான சைரா நரசிம்மா ரெட்டி

சிரஞ்சீவி நடித்துள்ள ’சைரா நரசிம்மா ரெட்டி’ என்கிற வரலாற்று படம் ரிலீசுக்கு முன்பே அதிக தொகைக்கு வியாபாரமாகியுள்ளது.
சைரா நரசிம்மா ரெட்டி படக்குழு
சைரா நரசிம்மா ரெட்டி படக்குழு
Published on

‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் வெற்றியை அடுத்து வரலாற்று கதைகளுக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். 

அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் இதுவரை ரூ.40 கோடிக்கு வியாபாரமாகி இருக்கிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com