தமிழ் புத்தாண்டில் ரிலீசாகும் கென்னடி கிளப்

சுசீந்தரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக இருக்கிறது. #KennedyClub #Sasikumar
தமிழ் புத்தாண்டில் ரிலீசாகும் கென்னடி கிளப்
Published on

ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது. 

சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

படம் பற்றி சுசீந்திரன் பேசும் போது, 

‘‘பெண்கள் கபடியை மையமாக கொண்ட கதை, இது. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடைபெற்றதோ அங்கெல்லாம் சென்று நிஜ போட்டிகளை படமாக்கி இருக்கிறோம். சேலம், ஈரோடு, கோவை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.

பெரும்பாலான காட்சிகளை 4 கேமராக்கள் மூலம் படமாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மகாராஷ்டிரா சென்றோம். அங்கிருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஹரியானாவில் நடைபெற இருக்கும் நிஜ போட்டியையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

சீன மொழிக்கான டப்பிங் உரிமை (ரூ.2 கோடிக்கு) படம் வெளியாவதற்கு முன்பே விற்பனை ஆகியிருக்கிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வரும்.’’ என்றார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

X

Maalai Malar
www.maalaimalar.com