இன்று முதல் ஜீனியஸை இயக்கும் சுசீந்திரன்

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை தொடர்ந்து ஏஞ்சலினாவை இயக்கி வரும் சுசீந்திரன், அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். #Genius #Suseenthiran
இன்று முதல் ஜீனியஸை இயக்கும் சுசீந்திரன்
Published on

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை தொடர்ந்து, சுசீந்திரன் தற்போது இயக்கி வரும் படம் ‘ஏஞ்சலினா’. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் இயக்குனர் சுசீந்திரன். தான் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘ஜீனியஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பாகியுள்ளது.

இந்த படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இன்றைய சமுதாய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வியை நாம் திணிப்பதால் அவர்கள் எந்த அளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், அப்படி மன அழுத்தத்திற்கு ஆளான ஒருவன், அவன் மனநிலை, அவன் வாழ்க்கை என ஒரு கதாபாத்திரத்தை சுற்றி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளேன். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த படத்தில் நடிப்பவர்கள் மற்றும் இப்படத்தில் பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த விவரங்களையும் சுசீந்திரன் வெளியிடவில்லை. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க உள்ளார்கள். #Genius #Suseenthiran

X

Maalai Malar
www.maalaimalar.com