

அனிருத் இசையில் ‘சொடக்கு...’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. சொடக்கு பாடல் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. முழு பாடல் எப்போது வெளியாகும் என்று அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
இதை தொடர்ந்து சொடக்கு முழு பாடல் நேற்று முன்தினம் வெளியானது. குத்து பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் அனைவரையும் முனுமுனுக்க, ஆட்டம் போட வைக்கும் இசையை கொண்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசித்து விரும்பு கேட்கும் வகையில் உள்ள ‘சொடக்கு...’ பாடலை இரண்டே நாட்களில் 2 மில்லியன் பேர் யூடியூப்பில் பார்த்து, கேட்டு ரசித்துள்ளனர்.