சமந்தா படத்தில் சூர்யா நடிகை

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘யூடர்ன்’ படத்தில் சூர்யாவுடன் நடித்த நடிகை நடிக்க இருக்கிறார். #Uturn
சமந்தா படத்தில் சூர்யா நடிகை
Published on

கன்னடத்தில் 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘யூடர்ன்’. தற்போது இது தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. பவன்குமார் இயக்கும் இந்த படத்தில் சமந்தா, ஆதி, ரவீந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ‘சில்வர் ஸ்க்ரீன்’ நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா தயாரிக்கிறார்.

தற்போது இந்த படத்தில் பிரபல நடிகை பூமிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட வெர்ஷனில் ராதிகா சேட்டன் நடித்திருந்த கேரக்டரில் பூமிகா நடிக்கவிருக்கிறாராம். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்த பூமிகா, மீண்டும் இப்படம் மூலம் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘யூடர்ன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com