`சொடக்கு மேல சொடக்கு' போடும் சூர்யா

விக்கேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் டிராக்கான சொடக்கு பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
`சொடக்கு மேல சொடக்கு' போடும் சூர்யா
Published on

விக்கேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் இருந்து `நானா தான வீணா போனேன்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் டிராக்கான `சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடல் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக தீபாவளியை முன்னிட்டு `சொடக்கு' பாடலின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், முழு பாடலும் தற்போது வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர் நவம்பரிலும், இசை வெளியீடு மற்றும் டிரைலர் டிசம்பரிலும் நடக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com