காப்பான் படக்குழுவுக்கு பிரியாணி விருந்தளித்த சூர்யா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார். #Kaappaan #Suriya #Mohanlal
காப்பான் படக்குழுவுக்கு பிரியாணி விருந்தளித்த சூர்யா
Published on

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று பிரியாணி விருந்து அளித்தார். காப்பான் படக்குழுவுக்கு சூர்யா பிரியாணி பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் பாடல் காட்சியை படக்குழு படமாக்கி வருவதாகவும், அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலை படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya

X

Maalai Malar
www.maalaimalar.com