`தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் வில்லனான சூர்யா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் வில்லனான சூர்யா?
Published on

ஸ்டூடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுவும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாகவே இருக்கும். இந்நிலையில், சமீபத்தில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில், கார்த்திக் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலா நடிக்கிறார் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது, அது அவரது கதாபாத்திரத்தை பொறுத்தது. கார்த்தியின் பார்வையில் சூர்யா வில்லனாக தெரியலாம் என்று கூறியிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com