சூர்யாவின் சொடக்குக்கு இவ்வளவு வரவேற்பா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ‘சொடக்கு மேல’ பாடல் யூடியூப்பில் புதிய சாதனை ஒன்று படைத்துள்ளது. #Suriya #Sodakku #TSK
சூர்யாவின் சொடக்குக்கு இவ்வளவு வரவேற்பா?
Published on

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் செந்தில், ரம்யா கிருஷ்ணன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘சொடக்கு மேல...’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது. அதாவது, இதுவரை இந்த பாடலை 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர் பார்த்து ரசித்துள்ளனர். மிகவும் வேகமாக 50 மில்லியன் தொட்ட பாடலாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அனிருத் இசையில், பிரபல பாடகர் ஆந்தோனி தாசன் குரலில் உருவாகியுள்ள சொடக்கு பாடல் பட்டி தொட்டி என அனைத்து இடங்களில் இன்னும் ஒலித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com