ஜெய்யுடன் இணைந்த சூர்யா

பலூன், பார்ட்டி, கலகலப்பு 2 படங்களை தொடர்ந்து ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஜருகண்டி’ படத்தில் சூர்யாவும் இணைந்திருக்கிறார். #Jarugandi #JarugandiTeaser
ஜெய்யுடன் இணைந்த சூர்யா
Published on

'பலூன்' படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள ஜெய்யின் அடுத்த படம் 'ஜருகண்டி'. இப்படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள்  இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கிவருகிறார். இப்படத்தை நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.

'ஜருகண்டி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில தினங்களுக்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் செய்தார். நல்ல சினிமாவை என்றுமே ஊக்குவிக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் ஆதரவு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார். இதன் டீசரை பிப்ரவரி 5ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், போபோ சஷியின் இசையில், பிரவீன் கே.எல். படத்தொகுப்பில், ரேமியன் கலை இயக்கத்தில், டான் அசோக்கின் ஸ்டண்ட் இயக்கத்தில் 'ஜருகண்டி' உருவாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com