சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளினிகள்: ரசிகர்கள் கொந்தளிப்பு

நடிகர் சூர்யாவின் உயரத்தை கேலி செய்து நிகழ்ச்சியில் பேசிய தொகுப்பாளிகளை, சூர்யாவின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளினிகள்: ரசிகர்கள் கொந்தளிப்பு
Published on

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சூர்யா அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்ப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமிதாப்புடன் சூர்யா நடிக்க உள்ளதை கிண்டல் அடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் பேசினர். சூர்யாவின் உயரத்தை கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். சிலர் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளனர்.

இந்நிலையில், சூர்யாவை கிண்டலடிக்கும் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி அலுவலகம் முன்பு இன்று சூர்யா ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com