ரசிகர்களோடு குத்தாட்டம் போட்ட சூர்யா

கேரளாவில் தன்னுடைய படத்தின் புரொமோஷனுக்கு சென்ற சூர்யா, அங்கு ரசிகர்களோடு சேர்ந்து சொடக்கு மேல பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
ரசிகர்களோடு குத்தாட்டம் போட்ட சூர்யா
Published on

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டகியுள்ளது.

குறிப்பாக ‘சொடக்கு மேல...’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் புரொமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

கேரளாவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் புரொமோஷன் பணிகளைச் செய்வது வழக்கம். அதன்படியே, இந்த முறையும் கொச்சினில் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளார். 

அதன் பின் ரசிகர்கள் மத்தியில் சூர்யா ஆடிய வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரலாக்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com