சுரேஷ் ரவி - ரவீனா இணையும் காவல்துறை உங்கள் நண்பன்

ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகும் `காவல்துறை உங்கள் நண்பன்' படத்தின் மூலமாக சுரேஷ் ரவி - ரவீனா இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். #KavalThuraiUngalNanban #SureshRavi #Raveena
சுரேஷ் ரவி - ரவீனா இணையும் காவல்துறை உங்கள் நண்பன்
Published on

பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளரான சுரேஷ் ரவி மோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதேபோல் பிரபல பின்னணி குரல் பதிவாளரான ரவீனா, விதார்த்துடன் கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இந்த நிலையில், சுரேஷ் ரவி - ரவீனா இருவரும் புதிய படம் மூலம் இணைந்துள்ளனர். காவல்துறை உங்கள் நண்பன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆர்.டி.எம். இயக்குகிறார். 

காவலருக்கும் - டெலிவரி பணியாளருக்குமான உறவை பற்றி பேசும் இந்த படத்தை பி.ஆர்.டாக்கிஸ் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கிறது.

ஆதித்யா- சூர்யா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இடம்பெறும் ராணி தேனீ என்ற பாடலை படக்குழு உருவாக்கியுள்ளது. இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் ஹரிசரண் பாடி இருக்கிறார். #KavalThuraiUngalNanban #SureshRavi #Raveena

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com