ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்
Published on

விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக், காயத்ரி, நிகாரிகா கொனிதலா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருக்கிறார். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, படத்தின் இசையும் மலேசிய நட்சத்திரக் கலைவிழாவின் போது வெளியிடப்பட்டது.

'7c's என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்' தயாரித்துள்ள இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'அம்மே நாராயணா என்டர்டெயின்மெண்ட்' இந்த படத்தை வெளியிடுகிறது. 

படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com