ரஜினி படத்துடன் ராஜாவாக வரும் சிம்பு

சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீசரை ரஜினிகாந்தின் 2.0 படத்துடன் இணைக்க லைகா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR
ரஜினி படத்துடன் ராஜாவாக வரும் சிம்பு
Published on

`செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி. இயக்கும் இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. 

இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மகத் ராகவேந்திரா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் டீசருக்கு சிம்பு டப்பிங் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், படத்தின் டீசர் புரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அந்த புரோமோ வீடியோவில் படத்தின் டீசர் வருகிற 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள 2.0 படம் வருகிற 29-ஆம் தேதி உலகமெங்கம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், 2.0 படத்துடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசரை இணைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com