சிம்பு படத்தின் தலைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். #strmaanaadu #maanaadu #vp9
சிம்பு படத்தின் தலைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படத்திற்கு `மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அரசியலை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இது எஸ்.டி.ஆரின் மாநாடு என்றும், வெங்கட் பிரபுவின் அரசியல் என்றும் வெங்கட் பிரபு அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளாது. அந்த போஸ்டரில் தனியாக நின்றாலும், நியாயத்தின் பக்கம் துணையாக நிற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

முன்னதாக இந்த படத்திற்கு ‘அதிரடி’ என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜான்வி கபூருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. 

விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #strmaanaadu #maanaadu #vp9 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com