குருநாதர் சிம்பு இல்லையேல் நானில்லை: டிரைலர் வெளியீட்டு விழாவில் சந்தானம் பேச்சு

குருநாதர் சிம்பு இல்லையேல் நானில்லை: டிரைலர் வெளியீட்டு விழாவில் சந்தானம் பேச்சு

`சக்க போடு போடு ராஜா' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சந்தானம் தனது குருநாதர் சிம்பு தான். அவர் இல்லையேல் தான் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டேன் என்று பேசினார்.
Published on

அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிம்பு தான் தனக்கு குருநாதர். அவரது வழிநடத்தலாலேயே தான் இந்த இடத்திற்கு வரமுடிந்தது. இந்த படத்திற்காக இசையமைக்க அவரிடம் அனுகிய போது, முதலில் யோசித்தார், பின்னர் சம்மதம் தெரிவித்து தற்போது பாடல்களுக்கு அருமையாக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். அவரது பிசியான நேரத்திலும் தனது படத்திற்கு சிறந்த இசையமைத்த சிம்பு, படத்தின் டிரைலருக்காகவும் இரவு, பகல் பார்க்காமல் உழைத்தார்.

மேலும் படத்தில் மாஸான சில பஞ்ச் வசங்களையும் தனக்காக எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் 5 இசையமைப்பார்கள் பாடல்களை பாடியுள்ளனர் என்பது படத்திற்கு சிறப்பு. யுவன் இசையில் சிம்பு பாடுவதை கேட்டிருப்போம். சிம்பு இசையில் யுவன் பாடுவதை விரைவில் கேட்போம். நடிகர் ஆர்யா, இயக்குநர் ராஜேஷ் தனது நெருங்கிய நண்பர்கள். இருவருமே தனக்கு நிறைய அறிவுரைகள் வழங்குவார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com