காற்றின் மொழி படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சிம்பு

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சிம்பு, டப்பிங் பணிகளை முடித்துள்ளார். #KaatrinMozhi #STR #Jyothika
காற்றின் மொழி படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சிம்பு
Published on

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி'. இந்த படத்தில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சிம்பு தனது காட்சிகளுக்காக நேற்று டப்பிங் பேசி முடித்தார். 

இந்த படத்தில் ரேடியோ ஷோ ஒன்றில் ஜோதிகாவுடன், திரைப்பட நட்சத்திரமாக சிம்பு தோன்றுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. அவர் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சிம்பு நடித்துக் கொடுத்தார். டப்பிங் பேசி முடித்த சிம்பு தன்னுடைய காட்சி சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்ததாக படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறினார்.

பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படம் ஆயுத பூஜையை ஒட்டி வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KaatrinMozhi #STR #Jyothika

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com