ஒரே படத்தில் ஐக்கியமான சிம்பு, விஜய் சேதுபதி

நடிகர் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ஒரே படத்தில் ஐக்கியமாகியிருப்பது உறுதியாகியிருக்கிறது.
ஒரே படத்தில் ஐக்கியமான சிம்பு, விஜய் சேதுபதி
Published on

இதில் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - கேத்தரின் தெரசா இணைந்து நடித்திருக்கும் படம் `கதாநாயகன்'.  சூரி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. விஜய் சேதுபதியும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே சிம்பு இப்படத்தில் தொடக்கமும் நானே, முடிவும் நானே என்ற வகையில், அவரது குரலை கொடுத்திருக்கிறார். அதாவது, `கதாநாயகன்' படத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் சிம்பு அவரது குரலில் பேசியிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். ஷான் ரோல்டன் இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக விஷ்ணு விஷால் தயாரித்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com