கபாலியை தொடர்ந்து ஜப்பான் மொழியில் டப் செய்யப்படும் பாகுபலி-2?

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ படம் ஜப்பானில் டப் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
கபாலியை தொடர்ந்து ஜப்பான் மொழியில் டப் செய்யப்படும் பாகுபலி-2?
Published on

வெளிநாடுகளில் அமெரிக்கா, கனடா, அரபு நாடுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படம் இந்திய மொழிகளிலேயே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தை ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய படங்களுக்கு ஜப்பானில் மிகுந்த வரவேற்பு உண்டு. ரஜினி நடிப்பில் உருவான நிறைய படங்கள் ஜப்பானில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளன. ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘முத்து’ படம் முதல் ‘கபாலி’ படம் வரை ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com