ஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கதாநாயகியாக நடித்து வரும் படத்தின் கதாநாயகனை படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய மடியில் உட்கார வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்
Published on

ஸ்ரீதேவி மகள் ஜான்வி இந்தி படநாயகியாக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் முதல் படம் ‘தடக்’. இவருடன் நாயகனாக இஷான் கட்டார் நடிக்கிறார். இவர், ஷாகித் கபூரின் தம்பி.

கரண்ஜோஹர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் நடிக்கும் ஜான்வி தனது தாயின் திடீர் மறைவை மறக்கும் விதத்தில் படப்பிடிப்பு தளத்தில் கலகலப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

இவருடன் ஜோடியாக நடிக்கும் நாயகன் இஷான் கட்டாரிடம் ஜாலியாக பழகுகிறார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின்போது, ஜான்வி தனது மடியில் இஷானை உட்கார வைத்துக்கொண்டார். இந்த புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ஜான்வியும் அவரது மடியில் இருக்கும் இஷானும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதவிர இஷான் அவருடைய செல்போனை பார்த்துக்கொண்டிருக்க, அவருடைய தலைமுடியை ஜான்வி சரிசெய்யும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

இதனால் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது. ஆனால் அது உண்மையில்லை. யாரிடமும் சகஜமாக ஜான்வி பழகுவார். வேறு காரணம் இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com