ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள்

தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி, தனது மகள் ஜான்வியை சாய்ரத் என்னும் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க வைக்கிறார்.
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள்
Published on

தமிழ்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி மும்பையைச் சேர்ந்த பட அதிபர் போனி கபூரை திருமணம் செய்து மும்பையில் குடியேறினார். அவருக்கு ஜான்வி, குஷி என்ற 2 மகள் உள்ளனர்.

இவர்களில் ஜான்வியை நடிகையாக அறிமுகப்படுத்துவதில் ஸ்ரீதேவி தீவிரமாக இருந்தார். ஜான்வியை பட விழாக்களுக்கும், பே‌ஷன் ஷோக்களுக்கும் அழைத்து சென்று பிரபலப்படுத்தினார். அதன்பிறகு பட வாய்ப்புகள் வந்ததும் சரியான கதை அமையாததால் அதை நிராகரித்தார். தமிழில் வந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்துவிட்டார்.

மேலும் ஜான்வி நடிப்பு குறித்து அமெரிக்கா சென்று படித்துவிட்டு வந்தார். இந்த நிலையில் ‘தடக்’ என்ற இந்திப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப்படத்தில் இஷான் கட்டார் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பத்மாவத் படத்தில் தீபிகாவின் கணவர் ரத்தன் சிங்காக நடித்த ஷாகித் கபூரின் தம்பி ஆவார்.

‘தடக்’ படம் மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். ஜான்வி ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன் படப்பிடிப்பு முடியாத நிலையில் தடக் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் ஜான்வி நடித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com