ஸ்ரீதேவி நடித்த கடைசி படம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி, கடைசியாக இந்தி படத்தில் நடித்துள்ளார். #SriDevi #RIPSriDevi
ஸ்ரீதேவி நடித்த கடைசி படம்
Published on

ஸ்ரீதேவியின் திடீர் மறைவு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி சமீபகாலமாக மீண்டும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கலாமா என்று அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. என்றாலும் சினிமாவில்தான் அவர் கவனம் அதிகம் இருந்தது.

ஷாருக்கான் நடித்துள்ள ஜீரோ படத்தில் சிறப்பு வேடத்தில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். இந்த படம் ஸ்ரீதேவியின் கடைசி படமாக அமைந்துவிட்டது.

ஜீரோ படம் விரைவில் வெளிவர உள்ளது. ஸ்ரீதேவியின் கடைசி படம் என்பதால் இது ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில் நடிகர் விஜய்யுடன் நடித்த ‘புலி’ படம்தான் ஸ்ரீதேவியின் கடைசி தமிழ் படமாக அமைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com