தன்னுடைய வாழ்க்கை படத்தில் நடிக்கும் ஸ்ரீ ரெட்டி

தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி, பட அதிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது குறை சொல்லி வரும் நிலையில், தன்னுடைய வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கிறார். #SriReddy #ReddyDairy
தன்னுடைய வாழ்க்கை படத்தில் நடிக்கும் ஸ்ரீ ரெட்டி
Published on

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக கூறினார்.

இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்க இருக்கிறார். தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன், ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அலாவுதீன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். 70 சதவிகிதம் ரகசிய கேமரா மூலம் படமாக்க இருக்கிறார்கள். ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெற இருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com