ஸ்ரீ லீக்ஸில் சிக்கும் பிரபல ஹீரோ

ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக பிரபல நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி உள்ளார். #SriReddy #Srileaks
ஸ்ரீ லீக்ஸில் சிக்கும் பிரபல ஹீரோ
Published on

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்பு தேடும் பெண்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டியதுடன் ஸ்ரீலீக்ஸ் என்கிற பெயரில் ஆபாச படங்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் உள்ள அனைவரையுமே அதிரவைத்தார்.

இந்த லிஸ்டில் இயக்குனர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் உள்ளிட்டோர் சிக்கினர்.

இந்நிலையில் தற்போது நடிகர் நானி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

நடிகர் நானி, தமிழில் நடிகை சமந்தாவுடன் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய நான் 'ஈ', கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'வெப்பம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஆரம்பமாக உள்ள பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com