சுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் - ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்

அரண்மனை படப்பிடிப்பின் போது சுந்தர் சி.யுடன் பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட் செய்ய சொன்னதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். #SriReddy #SriLeaks #SundarC
சுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் - ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்
Published on

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தமிழ் திரையுலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் குற்றம்சாட்டி வருகிறார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியதால் தமிழ் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவரும் ஸ்ரீரெட்டிக்கு ஐதராபாத்தில் நுழைய தடை விதிக்கப்படலாம் என்ற வதந்தி பரவி உள்ளது. 

ஐதராபாத்தில் நுழைய தனக்கு தடை விதிக்க வேண்டாம் என்று தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகரராவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார். 

தற்போது  நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதுகுறித்து ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.

படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்... கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி பேஸ்புக்கில் போஸ்ட் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #SundarC

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com