சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று மாலை சிறப்பு விருந்து

`வேலைக்காரன்' படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று மாலை சிறப்பு விருந்து ஒன்று காத்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று மாலை சிறப்பு விருந்து
Published on

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது.

சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார்.

இப்படத்தில் இருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டீசரை இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி `வேலைக்காரன்' படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com