அக்டாேபர் 5-ல் சிம்புவின் அடுத்த ரிலீஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் நிலையில், அவரது அடுத்த ரிலீஸ் என்னவென்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அக்டாேபர் 5-ல் சிம்புவின் அடுத்த ரிலீஸ்
Published on

அதற்கிடையே சிம்பு ரசிகர்களுக்கு வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி சிறப்பு விருந்து ஒன்று வழங்கப்படுகிறது. அது என்னவென்றால் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் `சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வி.டி.வி. கணேஷ் தயாரித்து வரும் இந்த படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

`கலக்கு மச்சான்' என துவங்கும் அந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சந்தானத்திற்காக இப்படத்தில் பிரமாண்டமான சண்டைக்காட்சிகள் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com