`விஐபி 2' படத்துக்காக தனுஷ் - கஜோல் புதிய முயற்சி

தனுஷ் - அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ப்ரமோஷனுக்காக இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
`விஐபி 2' படத்துக்காக தனுஷ் - கஜோல் புதிய முயற்சி
Published on

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

படிப்பிடிப்பு முடிந்ததால், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக படத்தை விளம்பரப்படுத்துவதில் சவுந்தர்யா ரஜினிகாந்த் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்.

அதாவது, படத்தின் புரமோஷனுக்காக தனுஷ் - கஜோல் இணைந்து நடித்துள்ள சிறப்பு பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சியை இணையதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு மக்களிடையே விளம்பரப்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com