தாத்தா ஆகப்போகும் விக்ரம்

நடிகர் விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போவதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம்
விக்ரம்
Published on

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்துக்கும், கடந்த 2017-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கோபாலபுரம் இல்லத்தில் திருமணம் நடந்தது. 

இந்நிலையில் அக்‌ஷிதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டு இருப்பதால் இருவீட்டார் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம். விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போகும் செய்தி அறிந்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

விக்ரம் தற்போது அஜய்ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’, கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள ‘சீயான் 60’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ்வும்  முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com