`சோலோ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் - ஆர்த்தி வெங்கடேஷ், சாய் தன்ஷிகா, நேகா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன் நடிப்பில் உருவாகி இருக்கும் `சோலோ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
`சோலோ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ஆர்த்தி வெங்கடேஷ், சாய் தன்ஷிகா, நேகா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சாய் தமங்கர், பிரகாஷ் பேலவாடி, அன்சன் பால், அன் அகஸ்டின், சதீஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் தன்ஷிகா இப்படத்தில் கண் தெரியாத நடனப் பெண்ணாக நடித்திருக்கிறார்.

ருத்ரா உலகம் (பூமி), சிவா உலகம் (தீ), சேகர் உலகம் (தண்ணீர்), த்ரிலோக் உலகம் (காற்று) என நான்கு விதமான கதைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் தணிக்கை குழுவில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com