காஜல் அகர்வாலை இத்தனை பேர் பின் தொடர்கிறார்களா?

நடிகை காஜல் அகர்வாலை டுவிட்டரில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
காஜல் அகர்வாலை இத்தனை பேர் பின் தொடர்கிறார்களா?
Published on

காஜல் அகர்வால் கடந்த ஆண்டு மே மாதம் டுவிட்டர் கணக்கை தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் நடிக்கும் புகைப்படங்களை இதில் வெளியிட்டு வந்தார். இதை பார்ப்பதற்காக டுவிட்டரில் அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகி வந்தது. இதையடுத்து ரசிகர்களுடன் அவ்வப்போது டுவிட்டரில் கலந்துரையாடினார்.

இதன் காரணமாக காஜல் அகர்வாலை டுவிட்டரில் தொடருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகியது இப்போது காஜல் அகர்வாலை டுவிட்டரில் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாகி இருக்கிறது. இதற்கு அவர் இந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com