`குரு உச்சத்துல இருக்காரு' படக்குழுவுக்கு சினேகன் வைத்த கோரிக்கை

அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் `குரு உச்சத்துல இருக்காரு' படக்குழுவுக்கு பிக்பாஸ் புகழ் சினேகன் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.
`குரு உச்சத்துல இருக்காரு' படக்குழுவுக்கு சினேகன் வைத்த கோரிக்கை
Published on

குரு உட்சத்துல இருக்காரு படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக்பாஸ் புகழ் சினேகன் பங்கேற்றனர்.

இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது.

குரு உச்சத்தில இருக்காரு திரைப்படத்திற்கு இசையமைத்த தாஜ் நூர், இதில் வேலை பார்த்தது தனக்கு ஒரு புது அனுபவத்தை தந்ததாகவும், பாடல் காட்சிகள் படப்பிடிப்புகள் முடிந்த பின்னால் இசையமைத்தது சவாலாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

சினேகன், பா. விஜய் மற்றும் மீனாட்சி சுந்தரம் இந்த திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com