சிவக்குமாரின் சபதம்

டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் சிவக்குமாரின் சபதம் படத்தின் முன்னோட்டம்.
சிவகுமாரின் சபதம் படத்தின் போஸ்டர்
சிவகுமாரின் சபதம் படத்தின் போஸ்டர்
Published on

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிவகுமாரின் சபதம். இப்படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்களின் பெரு வெற்றியை தொடர்ந்து, மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். படத்தில் கதாநாயகி மாதுரி கதாநாயகன் ஆதியை காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைத்து உருகி பாடுவதாக வரும் பாடல் இது.

ஹிப்ஹாப் ஆதி இப்படத்தில் நடித்து, இசையமைப்பதோடு, கதை, திரைக்கதை, பாடல்கள், எழுதி படத்தை இயக்கவும் செய்துள்ளார். அருண்ராஜா (ஒளிப்பதிவு), தீபக் S. துவாரகநாத் (படத்தொகுப்பு), சந்தோஷ் (நடன இயக்குனர்), ஸ்ரீஜித் சாரங் (கலரிஸ்ட்), வாசுதேவன் (கலை இயக்குனர்), Nectar Pixels Media (VFX),  தபஸ் நாயக் (ஒலி கலவை), நிகில் மேத்யூஸ் (ஒலி பொறியாளர்), Sync Cinema (SFX), அமுதன் பிரியான் (டிசைன்ஸ்), அஸ்வந்த் ராஜேந்திரன் (நிர்வாக தயாரிப்பாளர்) ஆக பணியாற்றியுள்ளனர்.

டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com