கடைசி கட்டத்தில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்'

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்' படம் கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
கடைசி கட்டத்தில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்'
Published on

பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், படத்தில் இருந்து ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருக்கிறது. இரண்டாவது பாடல் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 22-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் பிசியாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் சிவகார்த்திகேயன் - நயன்தாரா உள்ளிட்ட படக்குழு ராஜஸ்தான் சென்றிருக்கிறது. பாடல் காட்சிகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com