சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணையும் இரண்டு பிரபலங்கள்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் `சீமத்துரை' படத்தை தொடர்ந்து, அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் இரு முக்கிய பிரபலங்கள் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணையும் இரண்டு பிரபலங்கள்
Published on

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `வேலைக்காரன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் `சீமத்துரை' படத்தில் நடித்து வருகிறார். 

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். நெப்போலியன், சிம்ரன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிபடிப்பு தென்காசியில் நடந்து வருகிறது. 

இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாளாக நடந்து வந்த நிலையில், இருவரும் இணைவது தற்போது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 

இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானிடமும், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தையும் 24ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று 

எதிர்பார்க்கப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com