சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #MrLocal #Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
Published on

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பாக்ட்ரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் நிலையில், மிஸ்டர்.லோக்கல் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

X

Maalai Malar
www.maalaimalar.com