விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்

ராஜேஷ் படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கும் அறிவியல் சார்ந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் விவசாயியாக நடிப்பதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்தார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
Published on

சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு மிஸ்டர்.லோக்கல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரவிக்குமார் இயக்கும் படம் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.

படம்குறித்து இயக்குநர் ரவிக்குமார் பேசும் போது,

``இது, அறிவியல் சார்ந்த படம். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல்பிரீத்சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

அறிவியல் சார்ந்த படம் என்பதால், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.

ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.' என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம், இதுதான். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடந்தது.

இது, சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான படமாக இருக்கும். படத்தில் அவர் விவசாயியாக நடிக்கிறார். ரகுல்பிரீத்சிங், வேலை பார்க்கும் பெண்ணாக வருகிறார். கருணாகரன், யோகி பாபு நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள்.'' இவ்வாறு அவர் கூறினார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar #RakulPreetSingh

X

Maalai Malar
www.maalaimalar.com