சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்

ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி வரும் ‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ‘தாறுமாறா...’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்
Published on

இந்த பாடல் உலகம் முழுவதும் ஒளித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி நடித்திருக்கிறார்கள்.

சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த இந்த படத்தின் இசையை, முன்னணி இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அமைத்திருக்கிறார். கபிலன் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com