மிஸ்டர்.லோக்கலாக சிவகார்த்திகேயன்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயனின் 13-வது படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SK13 #Sivakarthikeyan
மிஸ்டர்.லோக்கலாக சிவகார்த்திகேயன்
Published on

சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்துக்கு ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ‘ஜித்து ஜில்லாடி’ என்பது விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும்.

படத்திற்கு தலைப்பு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று இயக்குநர் ராஜேஷ் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடக்கத்தில் ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பையே வைக்க படக்குழு முடிவு செய்ததாகவும், பின்னர் ‘மிஸ்டர்.லோக்கல்’ தலைப்பு படத்திற்கு பொருத்தமாக இருக்கும் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 

காமெடி என்டெர்டெயினராக உருவாகும் இந்த படத்தில் இரண்டாவது முறையாக சிவகார்த்தி கேயனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. #SK13 #Sivakarthikeyan #MrLocal #Nayanthara'

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com