வலைதளத்தில் டிரெண்டாகும் சிவகார்த்திகேயன் கிரிக்கெட்

பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி பெயரிடப்பாத படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையின் போது சிவகார்த்திகேயன், சூரி ஆடிய கிரிக்கெட் வீடியோ வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
Published on

தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடிக்கும் புதிய படத்தின் 3-ம் கட்ட படப்படிப்பு நடந்து வருகிறது. 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்ரன், நெல்போலியன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் படப்பிடிப்பு போக கிடைத்த சிறிய ஓய்வு நேரத்தில் சிவகார்த்திகேயன், சூரியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்த படத்தின் முதல் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com