பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: சார்லி

நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார் என்று நடிகர் சார்லி கூறியிருக்கிறார்.
பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: சார்லி
Published on

தனக்கென தனி நடிப்பால் ரசிகர்களை பல படங்களில் கவர்ந்தவர் நடிகர் சார்லி. இவர் தற்போது சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடித்திருக்கிறார். இப்படம் குறித்து, தன்னுடைய கதாபாத்திரம் குறித்தும் சார்லி கூறும்போது, ‘வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன்.

இப்படத்தில், திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும், எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் -தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது. இப்படத்தில் எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். 

இயக்குனர் மோகன் ராஜா, ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள்' என்று தான் கூறவேண்டும்’ என்றார் நடிகர் சார்லி.

X

Maalai Malar
www.maalaimalar.com