பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சிவா திரு இயக்கத்தில் பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் நடிக்க இருக்கிறார். #Sivakarthikeyan
பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் சிவகார்த்திகேயன்
Published on

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றில் நடித்திருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

திரு இயக்கியுள்ள இக்குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இதனை உருவாக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயனை இயக்குனர் திரு இயக்குவது போன்ற ஒரு படம் வெளியானது. அது பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் என்று கூறப்பட்டது. தற்போது தான் அது பெண் குழந்தைகளுக்கானது என தெரிய வந்துள்ளது. #Sivakarthikeyan

X

Maalai Malar
www.maalaimalar.com