`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்' படத்தின் ஆட்டம் முழுவதுமாக முடிந்திருப்பதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அறிவித்திருக்கிறார்.
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
Published on

மோகன் ராஜா இயக்கயியிருக்கும் இந்த படம் சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கிறது. இதில் மலையாள நடிகர் பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அவரது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ல் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com