பாட்ஷா இயக்குனரின் படத்தில் சிவா?

பாட்ஷா, அண்ணாமலை, சத்யா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அடுத்ததாக இயக்கும் படத்தில் சிவா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாட்ஷா பட போஸ்டர், சிவா
பாட்ஷா பட போஸ்டர், சிவா
Published on

ஆர்.ஜே.வாக ரேடியோவில் பணியாற்றிய சிவா, சென்னை 28 படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், தமிழ் படம், கலகலப்பு 2, சென்னை 28 இரண்டாம் பாகம், வணக்கம் சென்னை என நகைச்சுவை படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சிவா தற்போது சுமோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உடன் சிவா கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை, கமலின் சத்யா போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கிவர். இவர் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு இளைஞன் என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பின் அவர் சிவா படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com