

அந்த வகையில் சிம்பு மற்றும் தமன்னா நிற்பது போன்ற போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டர் குறித்து, இயக்குநரும், நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
அதாவது, `ஏஏஏ' போஸ்டரில் ஆண் (சிம்பு) தனது உடலை முழுவதுமாக மறைத்திருக்கிறார், ஆனால் பெண் (தமன்னா) அரைகுறை ஆடையுடன் உடலை காட்டிக் கொண்டு நிற்க்கிறாரே? என்ற ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் இதுகுறித்த வார்த்தைப் போரும் நடந்தது. இந்நிலையில் அவரது கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் சிம்பு, லக்ஷ்மி ராமகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.