கூட இருந்த நீயே இப்படி பண்ணலாமா: சிம்பு - ஆதிக் பேசிய உரையாடல் லீக்

AAA பட சர்ச்சையில் சிக்கிய சிம்பு, அதன்பின் ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேசிய போன் உரையாடல் கசிந்துள்ளது. #Simbu
கூட இருந்த நீயே இப்படி பண்ணலாமா: சிம்பு - ஆதிக் பேசிய உரையாடல் லீக்
Published on

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும் இயக்குனரும் பேசினார்கள்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தயாரிப்பாளரும், இயக்குனரும் பத்திரிகையாளர்களிடம் பேசியதற்குப் பிறகு, சிம்பு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேசியிருக்கிறார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

இதில் சிம்பு ஆதிக்கிடம், ‘கூட இருந்த நீயே இப்படி செய்யாலா... என்னுடன் இரண்டு வருடம் பயணித்த நீயே என்னைப் பற்றி தெரியாமல் பேசி இருக்கிற. என்னைப் பற்றி பேசியதால் உனக்கு ஏதாவது புரோஜனமாக நடந்ததா? இதன் மூலம் உனக்கு பட வாய்ப்பு கிடைத்தால் கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். என்று இவர்கள் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இவர்கள் பேசுவதை கேட்டால் சிம்பு மேல் தவறு இல்லை என்று தெரிகிறது. ஆதிக் ஏதோ பட வாய்ப்பிற்காக தான் இவ்வாறு சிம்புவிற்கு எதிராக பேசியுள்ளார் என்று தெரிகிறது. கடைசியில் சிம்பு பிரச்னையை விடு, நீ இவ்வாறு செய்தது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி முடித்துவிட்டார. வெளியான அந்த ஆடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com