`பிரேமம்' இயக்குநரின் அடுத்த படத்தில் இணையும் முன்னணி நடிகர்

அல்போன்ஸ் புத்ரன் அடுத்ததாக இயக்கவிருக்கும் இசை சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க சித்தார்த் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
`பிரேமம்' இயக்குநரின் அடுத்த படத்தில் இணையும் முன்னணி நடிகர்
Published on

அதற்காக இசை என்னும் கடலில் தனது கால்களை நனைத்து, அதில் நனைந்திருக்கிறேன். இந்த படம் நகைச்சுவை, காதல் கலந்த ஒரு உணர்வுப்பூர்வமான சாதாரண படமாக இருக்கும். ஆனால் `நேரம்', `பிரேமம்' போன்று கண்டிப்பாக இருக்காது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தில் நிவின் பாலி நடிக்கவில்லை. ஆனால் நிவினுடன் மீண்டும் இணைவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அல்போன்ஸ் தனது அடுத்த படத்தில் யாரை இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வந்த நிலையில், ஜெயராமின் மகன் காளிதாஸை புதிய படத்தில் இயக்கவிருப்பதாக முன்னதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அது உறுதியாகி இருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் அல்போன்ஸ் புத்ரனின் நண்பரும், நடிகருமான சித்தார்த்தும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. காளிதாஸ், சித்தார்த் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com