சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் - ரம்யா நம்பீசன், வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் `சத்யா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

‘சைத்தான்’ பட இயக்கினர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகன், நாயகியாக சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர்.

வரலட்சுமி, ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான `சத்யா' படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com